புனித வின்சென்ட் தே பவுல் சபை

புனித வின்சென்ட் தே பவுல் சபை 1984 இல் சிறுவழி இயக்க இளைஞர் பிரிவு என ஆரம்பிக்கப்பட்டது. அடுத்த கட்டமாக 1986 ஆம் ஆண்டு புனித வின்சென்ட் தே பவுல் சபையாக முறைப்படி திருத்துவபுரம் நிர்வாக சபையின் கீழ் இணைக்கப்பட்டது.199ல் உலக மகா சபையில் இணைக்கப்பட்டது. 

செயல்பாடுகள்: வின்சென்ட் தே பால் சபை உறுப்பினர்கள் ஏழைகள் நலன் பெற வேண்டும் என்பதை முக்கிய பணியாக கொண்டு செயல்படுகின்றனர். ஏழை எளியவர்களின் தேவையறிந்து ஆன்மீகம்,கல்வி, மருத்துவம், வீடுகள் கட்டிக் கொடுத்தல், வீடுகள் பழுது பார்த்தல், சிறு தொழில் தொடங்க உதவி ஆகிய பணிகளை நல் உள்ளம் கொண்டவர்களின் உதவியோடு செய்து வருகிறோம். பங்கின் வளர்ச்சியில் முழுமையான அக்கறை கொண்டு இறையாட்சி பணியை பிறர் நலன் பேணுதல் வழியாக செயல்படுத்துகிறோம். குறிப்பாக ஏழை குடும்பங்களை தத்தெடுத்து அக்குடும்பம் தன்னிறைவு பெறும் வரை உதவுகிறோம். மருத்துவமனைகள் இல்லங்களில் நோயாளிகளையும் முதியோர்களையும் சந்தித்து ஆறுதல் கூறுவதோடு தேவைப்படுவோரின் நிலை அறிந்து துயர் துடைக்கிறோம்.