கிறிஸ்தவ வாழ்வு சமூகம்

செயல்பாடுகள்: கிறிஸ்துவை மையமாகவும் அன்னை மரியாளை முன்மாதிரியாகவும் கொண்டு கிறிஸ்துவின் மதிப்பீடுகளை கொண்டு ஒரு அன்பு சமூகமாக வாழ்ந்து சமுதாய மாற்றத்திற்காக உழைத்து அனைவரையும் கிறிஸ்துவிடம் அழைத்து செல்வதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறோம். எமது கிறிஸ்தவ வாழ்வு சமூக கூட்டமானது நற்செய்தி கூட்டமாகவும் பாடல் கூட்டமாகவும் சமூக விழிப்புணர்வு கூட்டமாகவும் வீடு சந்தித்து ஜெபிக்கும் கூட்டமாகவும் குடும்ப பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் கூட்டமாகவும் நடைபெறுகிறது. நோயுற்றோர் ஆதரவற்றவர்கள் மற்றும் இறந்தோர் வீடு சென்று ஜெபிப்பதை எமது முக்கியமான பணியாக கொண்டுள்ளோம். மேலும் திருவருட் சாதனங்கள் பெறாதவர்களை இனம் கண்டு பெறுவதற்கான தயாரிப்புகளில் ஈடுபடுகிறோம். அன்னை மரியாள் திரு நாட்களை ஈடுபாட்டுடன் கொண்டாடுவதையும் பலரையும் அதில் ஈடுபடுத்துவதையும் முக்கியமான பணியாக கொண்டுள்ளோம். மேலும் செயல்படாத அன்பியங்கள் செயல்பட வைப்பதோடு நாங்களும் அதில் அதிக ஆர்வத்தோடு ஈடுபட்டு வருகிறோம். பெற்றோர் மறைக்கல்வியில் பலரும் கலந்து கொண்டு போட்டிகளில் பங்கு கொண்டு ஏனைய மாணவர்களுக்கு முன்மாதிரியாக உள்ளோம். அனைத்திற்கும் மேலாக நல்ல மாற்றங்களை திறந்த மனதோடு ஏற்று செயல்படுத்துகிறோம்.