கத்தோலிக்க சேவா சங்கம்
செயல்பாடுகள்: கத்தோலிக்க சேவா சங்கம் ஆனது உறுப்பினர்களின் தன்னலமற்ற பணியால் சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. முக்கிய பணிகளாக குடும்ப ஜெபத்தை ஊக்குவித்து அன்பியங்களை சந்தித்து ஜெப வழிபாடுகள் நடத்தி வீடுகளை சந்தித்து மக்களை குடும்பம் குடும்பமாக ஜெபிக்க தூண்டுகிறோம். படிக்க வசதியற்றவர்களை இனம் கண்டு உதவி செய்து வருகிறோம். பயிற்சிகளுக்கு மண்டல அளவில் ஏற்பாடு செய்து பங்கெடுக்கிறோம். ஆன்மீகப் பணியில் அதிக ஆர்வத்தோடு செயல்படுவதோடு வழிபாடுகளில் உற்சாகத்தோடு ஈடுபட பலரையும் தூண்டுகிறோம். மேலும் நற்செய்தி பணியை சிறப்புடன் கொண்டு செல்ல எமது உறுப்பினர்கள் தங்களுடைய நேரத்தை அதிகம் ஒதுக்கி செயல்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.