கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்._மத்தேயு 7:7
தூய கார்மல் மலை அன்னை ஆலயம்
விவிலியத்தில் ஓரேபு மலை, சீனாய் மலை,தாபோர் மலை, கல்வாரி மலை என மலைகளுக்கென்று தனி தன்மையும் சிறப்பும் இருப்பது போன்று, கார்மேல் மலைக்கு என தனி சிறப்பு உண்டு. கார்மேல் என்றால் எபிரெய மொழியில் அழகான பூந்தோட்டம் என பொருள்படும். தனது பெயருக்கு ஏற்ப அழகிய தோட்டமாகவே கார்மேல் மலை திகழ்ந்துள்ளது என்பது இறைவாக்கினர் ஏசாயா நூலிலும் இனிமை மிகு பாடலும் சான்று பகர்கிறது. கார்மேல் மலைக்கு ஆழமான விவிலிய பின்னணி உண்டு. இறைவாக்கினர் எலியாவின் காலகட்டத்தில் கார்மல்மலை இறை வழிபாட்டின் தளமாக இயங்கி வந்தது.
நேரம்
ஞாயிறு திருப்பலி: காலை 6:30 ஜெபமாலை ,7:00 திருப்பலி
செவ்வாய்,வியாழன்,வெள்ளி,சனி:
காலை 6:30 மணி
புதன்: மாலை 5:00 ஜெபமாலை, 5:30 திருப்பலி